Breaking News
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 143 ஆக உயர்வு
செவ்வாய்கிழமை நான்கு மணி நேரத்திற்குள் வயநாட்டில் மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், தேசியப் பேரிடர் மேலாண்மை மற்றும் இராணுவம் உட்பட பல அமைப்புகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

வயநாட்டின் மேப்பாடி அருகே மலைப்பகுதிகளில் பாரிய நிலச்சரிவு ஏற்பட்டதில் குறைந்தது 143 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் சுமார் 130 பேர் காயமடைந்துள்ளனர் என்று கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார். உத்தியோகபூர்வ தரவுகளின்படி, கிட்டத்தட்ட 100 பேர் கணக்கில் வரவில்லை.
செவ்வாய்கிழமை நான்கு மணி நேரத்திற்குள் வயநாட்டில் மூன்று நிலச்சரிவுகள் ஏற்பட்டதால், தேசியப் பேரிடர் மேலாண்மை மற்றும் இராணுவம் உட்பட பல அமைப்புகள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் நபர்களைக் கண்டறிய மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ள நிலையில், காணாமல் போனவர்களின் எண்ணிக்கையைத் தீர்மானிக்க மாவட்ட அதிகாரிகள் புதன்கிழமை தரவுகளைச் சேகரிக்கத் தொடங்கினர்.