இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழப்பு
இஷாரா செவ்வந்தியின் தாயார் கடந்த வெள்ளிக்கிழமை (11) வெளிக்கடை மெகசின் சிறைச்சாலையினுள் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேகநபரான தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இஷாரா செவ்வந்தியின் தாயார் கடந்த 11 ஆம் திகதி மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஞ்சீவ குமார சமர ரத்ன என்னும் கணேமுல்ல சஞ்சீவ புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரதான சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் தாயார் மற்றும் சகோதரர் ஆகியோர் குற்றச்செலுக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
செத்புர தேவகே சமந்தி என நீதிமன்றத்தில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் தாயார் 4 மாதங்களுக்கும் மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததுடன் கடந்த வெள்ளிக்கிழமை (11) வெளிக்கடை மெகசின் சிறைச்சாலையினுள் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பெப்ரவரி 24 ஆம் திகதி இஷாரா செவ்வந்தியின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் கைது செய்யப்பட்டு 25 ஆம் திகதி கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.