உயிர்த்தஞாயிறு தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரசு முயற்சி: கம்மன்பில குற்றச்சாட்டு
தமிழ் மொழிமூல வாக்குமூலம் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு எனக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த வாக்குமூலத்தில் எவ்விடத்திலும் குண்டுத்தாக்குதல்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை.

இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது. அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரசதரப்பு எதிர்பார்க்கிறது.குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன் எனவும் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை பிள்ளையான் சிறையில் இருந்தவாறே முன்கூட்டியதாகவே அறிந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்ட விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு வருமாறு குறிப்பிட்டார்.
பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால 2025.04.10 ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில்'தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் சர்ச்சைக்குரிய பல விடயங்களை விசாரணையின் போது குறிப்பிட்டுள்ளதாக' தெரிவித்தார்.இதனை நம்பி ஜனாதிபதியும் ஏப்ரல் 21 ஆம் திகதிக்கு முன்னர் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துதாக குறிப்பிட்டார்.
பிள்ளையானை நான் சிறையில் சென்று சந்தித்தேன். குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் பிள்ளையானிடம் விசாரணை அதிகாரிகள் ஏதும் கேட்கவுமில்லை, அவரும் ஏதும் குறிப்பிடவுமில்லை. ஆகவே அமைச்சர் ஆனந்த விஜேபால பொய்யுரைத்தார் என்பதை ஊடகங்களுக்கு குறிப்பிட்டேன்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவத்துக்காக பிள்ளையான் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடுவது பொய், அவ்வாறு குறிப்பிடுபவர்களுக்கு பைத்தியம்.கிழக்கு பல்கலைக்கழகத்தில் உபவேந்தரை கடத்தி, காணாமலாக்கிய சம்பவத்துக்காகவே பிள்ளையாள் கைது செய்யப்பட்டுள்ளார் என்று அமைச்சர் சுனில் அந்துனெத்தி குறிப்பிட்டிருந்தார். ஆகவே சுனில் அந்துனெத்தி பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கும், ஜனாதிபதிக்கும் பதிலளித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கடந்த அண்மையில் பாராளுமன்றத்தில் பிள்ளையான் பற்றி குறிப்பிட்டது முற்றிலும் பொய்யானது. பிள்ளையான் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் இரண்டு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.அத்துடன் பிள்ளையான் தமிழ் மொழியில் வழங்கிய வாக்குமூலத்தின் பிரதியை பொலிஸார் நீதிமன்றத்துக்கு சமர்ப்பித்துள்ளனர்.
தமிழ் மொழிமூல வாக்குமூலம் ஆங்கில மொழிக்கு மொழிப்பெயர்க்கப்பட்டு எனக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. அந்த வாக்குமூலத்தில் எவ்விடத்திலும் குண்டுத்தாக்குதல்கள் பற்றி குறிப்பிடப்படவில்லை. உபவேந்தர் காணாமலாக்கப்பட்ட சம்பவம் பற்றியே கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.
தமிழ் பிரிவினைவாதிகளின் நிதியை இந்த அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ளது. தமிழ் பிரிவினைவாதிகளை மகிழ்விப்பதற்கு விடுதலை புலிகளில் இருந்து விலகி இராணுவத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையானை பலிகொடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நன்றிக்கடன் நிமித்தமே பிள்ளையானுக்காக முன்னிலையாகியுள்ளேன்.
இராணுவத்தினரே குண்டுத்தாக்குதலை நடத்தினர் என்று பிள்ளையான் ஊடாக வாய்மூல சாட்சியத்தை பெறவே இந்த அரசாங்கம் முயற்சிக்கிறது.அசாத் மௌலானாவை அரச தரப்பு சாட்சியமாக மாற்றிக் கொண்டு குண்டுத்தாக்குதலை இராணுவத்தின் மீது சுமத்தவே அரசாங்கம் முயற்சிக்கிறது.குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை. அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிடுவது முற்றிலும் பொய்யானது என்றார்.