மத்தள மான நிலையம் 280மில்லிய டொலர்கள் கடன் ; அமைச்சர் பிமல் ரத்நாயக்க
அழகான சுற்றுச்சூழலில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இவ்வாறான சாதகமான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அதனை பயன்பாட்டுக்குரியதாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களும் காணப்படுகின்றன.

மத்தள சர்வதேச விமான நிலையம் 260 மில்லியன் டொலர் கடனைக் கொண்டிருக்கிறது. எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வரை இந்தக் கடனை செலுத்த வேண்டியுள்ளது. நாட்டில் மாற்று விமான நிலையமொன்று அத்தியாவசியமானது என்பதால் அதன் செயற்பாடுகளை முற்றாக நிறுத்த முடியாது. இந்த விமான நிலையத்தின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான திட்டமிடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
மத்தள சர்வதேச விமான நிலையத்துக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வர்த்தக திட்டமிடலொன்று இன்றியே மத்தள விமான நிலையம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாரிய கடன் ஏற்பட்டுள்ளது. சுமார் 260 மில்லியன் டொலர் கடனை எதிர்வரும் 2030ஆம் ஆண்டு வரை செலுத்த வேண்டியுள்ளது.
எனவே மத்தள விமான நிலையத்தில் விமான போக்குவரத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம். எனினும் ஓரிரு ஆண்டுகளில் எம்மால் அந்த இலக்கை அடைய முடியாது. இந்த விமான நிலையத்தால் கடன் மாத்திரமின்றி பாரிய செலவும் காணப்படுகிறது.
எவ்வாறிருப்பினும் அதன் செயற்பாடுகளை முற்றாக நிறுத்த முடியாது. காரணம் நாட்டில் மாற்று விமான நிலையமொன்று அத்தியாவசியமானதாகும். விமானங்களை கொள்வனவு செய்வதற்கு சிறந்த முதலீட்டாளர்களை வரவழைக்க வேண்டியுள்ளது.
எம்மால் அதனை செய்ய முடியாது. எவ்வாறிருப்பினும் விமானங்கள் பழுது பார்த்தல், அவற்றை புதுப்பித்தல் போன்ற செயற்பாடுகளை இங்கு முன்னெடுக்க முடியுமா என்பது தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம்.
அழகான சுற்றுச்சூழலில் இந்த விமான நிலையம் அமைந்துள்ளது. இவ்வாறான சாதகமான காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அதனை பயன்பாட்டுக்குரியதாக மாற்றுவதற்கான வேலைத்திட்டங்களும் காணப்படுகின்றன.
பயணிகளை வரவழைப்பதற்கான வேலைத்திட்டத்துக்குச் செல்வதற்கு முன்னர் இவ்வாறான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாகக் கிடைக்கும் வருமானம் இங்கு வீணாக செலவிடப்படுகிறது.
அதேவேளை இங்குள்ள அதிகாரிகள் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே தான் ஏனைய விமான நிலைய செயற்பாடு;களை ஊக்குவிப்பது குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம் என்றார்.