Breaking News
விதிகளை மீறும் விசாதாரர்களை நாடு கடத்த அமெரிக்கா முடிவு
"விசா வழங்கப்பட்ட பிறகு அமெரிக்க விசா பரிசோதனை நிறுத்தப்படாது" என்று தூதரகம் சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கச் சட்டங்கள் அல்லது குடியேற்ற விதிகளை மீறுவதாகக் கண்டறியப்பட்ட விசா வைத்திருப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என்று இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் சனிக்கிழமை எச்சரித்தது.
டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ்க் கடுமையான குடியேற்ற அமலாக்க நடவடிக்கைகளை வலுப்படுத்தியது. "விசா வழங்கப்பட்ட பிறகு அமெரிக்க விசா பரிசோதனை நிறுத்தப்படாது" என்று தூதரகம் சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
"விசா வைத்திருப்பவர்கள் அனைத்து அமெரிக்க சட்டங்களையும் குடியேற்ற விதிகளையும் பின்பற்றுவதை உறுதிசெய்ய நாங்கள் தொடர்ந்து சரிபார்க்கிறோம் – அவர்கள் பின்பற்றாவிட்டால் நாங்கள் அவர்களின் விசாக்களை ரத்து செய்வோம், அவர்களை நாடு கடத்துவோம்." என தெரிவித்துள்ளது.