ரோஹிதவின் மருமகனுக்கு விளக்கமறியல்: ஜகத் விதானகேவின் மகனுக்கு பிணை
தவறான தகவல்களை சமர்பித்து மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் வண்டி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித குணவர்தனவின் மருமகன் தனுக்க வீரக்கொடி எதிர்வரும் முதலாம் ஆம் திகதி வரையில் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
தவறான தகவல்களை சமர்பித்து மோட்டார் வாகன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் வண்டி தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே குறித்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் ரசிக்க விதானகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று மதுகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை 10 இலட்சம் ரூபா இரு சரீரப்பிணை களில் விடுவிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான தவறான தரவுகளுடன் பதிவு செய்யப்பட்ட ஜீப் தொடர்பாக அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
குறித்த ஜீப்பை பரிசோதனை செய்த போது அது சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு தவறான தரவுகளை சமர்ப்பித்து மோட்டார் போக்குவரத்துத் துறையில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்தது.ஜகத் விதானவுக்குச் சொந்தமான தனியார் நிறுவனத்தின் பெயரில் இரண்டாவது முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஜீப்பை அவரது குடும்பத்தினர் பயன்படுத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது.
விசாரணையின் போது கைது செய்யப்பட்ட ரசிக விதான பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரோசெல் மெலனி அபேகுணவர்தனவிடமிருந்து அந்த ஜீப்பை வாங்கியதாகக் வாக்கு மூலம் அளித்திருந்தார்.
அந்த வாக்கு மூலத்தை மையப்படுத்தி மேலதிக விசாரணைகளுக்காக கடந்த 19 ஆம் திகதி மதியம் களுத்துறை நாகொடவில் உள்ள ரோசெல் மெலனி அபேகுணவர்தனவின் வீட்டிற்கு வலான மோசடி தடுப்பு சிறப்பு படையினர் சென்றுள்ளனர்.ஆனால் அவரும் அவரது கணவரும் அங்கு இருக்கவில்லை.
அதன்படி வலான மோசடி தடுப்பு சிறப்பு படையினர் முன் வைத்த விடயங்களை ஆரயந்த்த மத்துகம நீதிவான் முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் மற்றும் மருமகனுக்கு வெளிநாட்டு பயணத் தடையை பிறப்பித்திருந்தார்.
இந்த பின்னணியில் ரோஹித்தவின் மருமகன் நேற்று மன்றில் முன்னிலையாகிமையடுத்து அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.