இலங்கை - பிரான்ஸ் கடன் ஒப்பந்த அமலாக்க கடிதங்களில் கைச்சாத்து
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப் பெருமவும், பிரான்ஸஸ் அபிவிருத்தி முகவரகத்தின் பணிப்பாளர் யாசித் பென்சாய்ட் பிரான்ஸ் ஆகியோர் கையொப்பமிட்டனர்.

இலங்கையின் வெளிநாட்டுக்கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் முக்கிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், இலங்கை மற்றும் பிரான்ஸ் அரசாங்கங்கள் தங்கள் இருதரப்பு கடன் ஒப்பந்தம் தொடர்பான அமலாக்க கடிதங்களில் உத்தியோக பூர்வமாக கையெழுத்திட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னதாக, நாட்டின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பிற்காக இலங்கைக்கும் உத்தியோக பூர்வமான கடன் வழங்குநர் குழுவிற்கும் இடையே கடந்த 20224ஆம் ஆண்டு ஜூன் 26 அன்று கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு ஒப்பந்தம் கடந்த ஜுன் 16ஆம் திகதி அன்று கையெழுத்தானது.
இப்பின்னணியிலேயே இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கும், பிரான்ஸ் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அங்கீகரிக்கப்பட்ட பிரான்ஸஸ் அபிவிருத்தி முகவரகம், பிபேபிரான்ஸ் அசுரன்ஸ் எக்போர்ட், பாங் டி பிரான்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் இடையில் அமலாக்க ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப் பெருமவும், பிரான்ஸஸ் அபிவிருத்தி முகவரகத்தின் பணிப்பாளர் யாசித் பென்சாய்ட் பிரான்ஸ் ஆகியோர் கையொப்பமிட்டனர்.
இந்த ஒப்பத்தந்தினை அடுத்து இலங்கை அரசாங்கத்திற்கும் பிரான்ஸ் அரசாங்கத்திற்கும் இடையிலான கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட கடன் நிதியுதவியை மீண்டும் பெறுவதை ஆரம்பிக்கவும், மேம்பாட்டுத் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கான பிரான்ஸ் அரசாங்கத்தின் அனைத்து கடன்களை பெறவும் புதிய திட்டங்களுக்கு நிதியுதவி கோருவதற்கும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.