Breaking News
இந்தியா நல்ல வர்த்தக கூட்டாளி அல்ல: டிரம்ப்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
"இந்தியா ஒரு நல்ல வர்த்தக பங்காளியாக இல்லை, ஏனென்றால் அவர்கள் எங்களுடன் நிறைய வியாபாரம் செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் வணிகம் செய்யவில்லை. எனவே நாங்கள் 25 சதவீதத்தில் உடன்பட்டோம். ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் நான் அதை கணிசமாக உயர்த்தப் போகிறேன் என்று நினைக்கிறேன். ஏனென்றால், அவர்கள் ரஷ்ய எண்ணெயை வாங்குகிறார்கள். அவர்கள் போர் எந்திரத்திற்கு எரிபொருள் நிரப்புகிறார்கள்," என்று டிரம்ப் செவ்வாயன்று சிஎன்பிசி க்கு அளித்த ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.