Breaking News
நிதி இராஜாங்க அமைச்சர் திங்கட்கிழமை முழு வரி விபரங்களையும் வெளியிடுகிறார்
வரி நிலுவையை அறவிடுவதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நிதியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

வரி தொடர்பான அனைத்து தகவல்களும் திங்களன்று (26) வெளியிடப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இக்காலப்பகுதியில் வரி நிலுவையை அறவிடுவதன் ஊடாக அரச வருமானத்தை அதிகரிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக சியம்பலாபிட்டிய சுட்டிக்காட்டினார்.
வரி நிலுவையை அறவிடுவதற்காக சுமார் 900 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த நிதியை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை (26) வரி தொடர்பான அனைத்து தகவல்களும் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்