பழம்பெரும் நடிகை எம்.என். ராஜமின் கணவரும் பின்னணிப் பாடகருமான ஏ.எல். ராகவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 87.
மே 2, 1960-ல் ஏ.எல். ராகவனும் பிரபல நடிகை எம்.என். ராஜமும் திருப்பதியில் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரு குழந்தைகள்.
இந்நிலையில் இன்று காலை ஏ.எல். ராகவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.
ஏ.எல். ராகவனின் மறைவுக்குத் தமிழ்த் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள்.