இஸ்ரேல் சென்றவர்கள் விபரத்தை வெளிப்படுத்துங்கள்: நிசாம் காரியப்பர் எம்.பி
தாபன விதிக்கோவையின் 12 ஆம் பந்தியில் அரச அதிகாரிகள் தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்களுக்கு செல்வதாயின் விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இஸ்ரேலின் மனித குலத்துக்கு எதிரான செயற்பாட்டுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற நிலையில், இலங்கையில் இருந்து ஒரு தரப்பினர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்கள்.இதன் உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 09-09-2025அன்று நடைபெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
இலங்கையின் ஊடகவியலாளர்கள் இஸ்ரேலுக்கு ஊடக மாநாட்டுக்கு சென்றதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டார்.இதற்கு பதலளித்த ஆளும் தரப்பின் உறுப்பினர் கௌசல்யா ஆரியரத்ன,இவர்கள் தனிப்பட்ட பயணமாகவே இஸ்ரேலுக்கு சென்றதாக குறிப்பிட்டார்.
இந்த குழுவில் அரச அதிகாரிகளும் உள்ளார்கள். தாபன விதிக்கோவை பற்றி பாராளுமன்ற உறுப்பினர் கௌசல்யாக ஆரியரத்ன அறிவாரா என்பது தெரியாது, அரச அதிகாரிகள் அரசமுறை விஜயம் மற்றும் தனிப்பட்ட பயணங்களுக்காவே வெளிநாடுகளுக்கு செல்ல முடியும்.
தாபன விதிக்கோவையின் 12 ஆம் பந்தியில் அரச அதிகாரிகள் தனிப்பட்ட வெளிநாட்டு பயணங்களுக்கு செல்வதாயின் விடுமுறைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.அதனை அந்த நிறுவனத்தின் பிரதானி அனுமதியளிக்க வேண்டும் இந்த பயணத்தில் தாபன விதிக்கோவையின் விதிமுறைகள் பின்பற்றப்பட்டதா,
இஸ்ரேல் காஸாவில் மனிதாபிமானற்ற முறையில் செயற்படுகிறது. குறுகிய நாட்களுக்குள் 367 சிவில் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளார்கள்.இதில் 150 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் உள்ளடங்குகிறார்கள். இஸ்ரேலின் மனித குலத்துக்கு எதிரான செயற்பாட்டுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்துகின்ற நிலையில், இலங்கையில் இருந்து ஒரு தரப்பினர் இஸ்ரேலுக்கு சென்றுள்ளார்கள்.இதன் உண்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.





