எம்.பிக்களின் பாதுகாப்பு குறித்து விசேட நடவடிக்கை ; பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவிப்பு
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து விசேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து பொலிஸ்மா அதிபரை பாராளுமன்றத்துக்கு அழைத்து விடயங்களை வினவுமாறு எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய 31-10-2025 அன்று பாராளுமன்றத்துக்கு வருகைத்தந்திருந்தார்.
சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
நாட்டின் பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்பு காரணிகள் மற்றும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்த பொலிஸ்மா அதிபர் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதாரண,
பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பில் இதன்போது கேள்வியெழுப்பினோம். என்னை பற்றி பொலிஸ்மா அதிபர் அண்மையில் குறிப்பிட்ட விடயம் குறித்து வினவிய போது அந்த விடயம் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் கவலை தெரிவித்தார்.
பாதுகாப்பு கோரும் சகல உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார் என்றார்.





