கிளிநொச்சி மக்களுக்கு முறையாக காணி அறுதி உறுதி பத்திரங்களை வழங்க வேண்டும்: சிறிதரன் எம்.பி
நூறு வருடங்கள் கடந்துள்ள போதும் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களுக்கு முறையாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை.
கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களுக்கு முறையாக காணி அறுதி உறுதி பத்திரங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடக்கு மாகாணத்தில் விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு உடன் தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் 09-09-2025 அன்று நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது, கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரிடம் கேள்வி எழுப்பி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்..அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
நூறு வருடங்கள் கடந்துள்ள போதும் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களுக்கு முறையாக காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படவில்லை. உறுமய திட்டத்தில் வழங்கப்பட்ட பத்திரங்களும் அலுவலகங்களால் மீள பெற்றுக் கொள்ளப்படும் என கனி அரிசி உறுதிகளை வழங்க முடியாவிட்டால் தற்காலிகமாக வழங்கப்பட்ட உறுதி பத்திரங்களையாவது வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மாவட்டத்தில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ள நிலையில் 12 ஆயிரத்திற்கும் இருக்கும் அதிகமான காணிகள் உள்ள நிலையில் அவர்களுக்கான கானி உறுதிப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஏன்? அதன்படி முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 1850 உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 477 விண்ணப்பங்கள் கிடைக்கப்பட்டுள்ளன. அதன்படி அந்த விண்ணப்பங்கள் ஏற்றவாறு காலை உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.





