சுங்கத்துக்கு 10 மாதங்களில் 2.115 ரில்லியன் ரூபா வருமானம்
2025 ஆம் ஆண்டு நிறைவடைந்த 10 மாதங்களில் இலங்கை சுங்கத் திணைக்களம் 2.115 ரில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக்கொண்டுள்ளது.
இந்த ஆண்டின் நிறைவடைந்த 10 மாதங்களில் இலங்கை சுங்கத் திணைக்களம் 2.115 ரில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக்கொண்டுள்ளது. இந்தாண்டு இலக்கிடப்பட்ட வருமானத்துக்கு மேலதிகமாக 300 பில்லியன் ரூபா வருமானத்தை பெற்றுக்கொள்ளவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சுங்கத்திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்த 10 மாதங்களில் இலங்கை சுங்கத் திணைக்களம் 2.115 ரில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டிக்கொண்டுள்ளது. அரச வரி வருமானத்தை ஈட்டும் பிரதான திணைக்களமான சுங்கத் திணைக்களம் வருடமொன்றில் பெற்றுக்கொண்ட அதிகளவான வருமானமாக இந்த தொகை காணப்படுகிறது.
பெற்றுக்கொண்ட வருமானத்தில் 630 பில்லியன் ரூபா மோட்டார் வாகனம் இறக்குமதி ஊடாக திரட்டப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கு இலக்கிடப்பட்ட வருமானத்துக்கு மேலதிகமாக 300 பில்லியன் ரூபாவை திரட்டிக்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.





