மருதானை புகையிரத நிலையத்தில் போத்தல் மூடிகளால் பயணிகள் இருக்கை
ருதானை புகையிரத நிலையம் மற்றும் புகையிரத பாதையில் முறையற்ற வகையில் வீசப்பட்ட போத்தல் மூடிகளை பயன்படுத்தி பயணிகள் ஆசனம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இலங்கையில் பொது போக்குவரத்து துறையில் பெரும்பாலான பயணிகள் தினமும் புகையிரதங்களைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் போத்தல்களை புகையிரத பாதைகளிலும் புகையிரத நிலையங்களிலும் ஒழுங்கற்ற முறையில் வீசுகின்றனர்.
ஒழுங்கற்ற முறையில் அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களின் மூடிகளை திறம்பட பயன்படுத்தி களனி பல்கலைக்கழக மாணவர்கள், சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் கழிவுகள், பிளாஸ்டிக் போத்தல்கள் முறையற்ற வகையில் சூழலுக்கு விடப்படுவதால் புகையிரத பாதைகள் மற்றும் அழகான மலையக புகையிரத பாதை போன்ற அழகான சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு குறிப்பாக சேதம் விளைவிக்கும் ஒரு சம்பவமாக மாறியுள்ளது.
ஒழுங்கற்ற முறையில் அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களின் மூடிகளை திறம்பட பயன்படுத்தி களனி பல்கலைக்கழக மாணவர்கள், சீரோ பிளாஸ்டின் சமூகம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் ஏற்பாடு செய்த ப்லூம் மோர்பிச் செயற்திட்டம் ஊடாக கடான அப்சைக்கிள் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் மருதானை புகையிரத நிலைய நிர்வாகத்தின் முழுமையான கண்காணிப்பில் மருதானை புகையிரத நிலையம் மற்றும் புகையிரத பாதையில் முறையற்ற வகையில் வீசப்பட்ட போத்தல் மூடிகளை பயன்படுத்தி பயணிகள் ஆசனம் ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இந்த பயணிகள் இருக்கை நேற்று மருதானா புகையிரத நிலையத்திற்கு வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டது. சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் இந்த பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப் பயன்படுத்துவதும், உற்பத்தி மிக்க புதுமைகளை உருவாக்குவதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பயணிகளின் பயன்பாட்டிற்காக நடைமேடை இருக்கையை மருதானை புகையிரத நிலைய பொறுப்பதிகாரி கபில புஷ்பகுமார திறந்து வைத்தார். புகையிரத நிலைய அதிபர் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர உட்பட களனி பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.





