அருட்தந்தை அன்ரோ டெனிசியஸிடம் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை
நில அபகரிப்பு போன்றவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களில் அருட்தந்தை அன்டோ டெனிசியஸ் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் பங்கேற்று வந்திருக்கின்றனர்.
யாழ்ப்பாண கத்தோலிக்க ஆயருக்கு கீழ் இயங்கும் சர்வதேச தொண்டு நிறுவனமான கியூடெக் கரிற்றாஸ் அமைப்பின் யாழ் கிளைக்குப் பொறுப்பான அருட்தந்தை அன்ரோ டெனிசியஸ் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களப் பேரினவாத அரசாங்கங்களினாலும், முப்படையினராலும் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், பாலியல் வன்முறைகள், மன்னார் காற்றலை மின்னுற்பத்தி திட்டம், தையிட்டியில் திஸ்ஸ விகாரை ஊடாக முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பு போன்றவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களில் அருட்தந்தை அன்டோ டெனிசியஸ் மற்றும் அவரது நிறுவன ஊழியர்கள் பங்கேற்று வந்திருக்கின்றனர்.
இவ்வாறானதொரு பின்னணியிலேயே 09-01-2026 அன்று யாழில் உள்ள கரிற்றாஸ் அலுவலகத்துக்குச் சென்ற பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் அருட்தந்தை அன்ரோ டெனிசியஸிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





