எம்.பிக்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் சபைக்கு சமர்ப்பிப்பு
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ,பாராளுமனற் ஓய்வூதிய சட்டத்தினை நீக்குவதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் பொருட்டு தயாரிக்கப்பட்ட சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சபைக்கு சமர்ப்பித்தார்.
சபாநாயகர் தலைமையில் 07-01-2026 அன்று பாராளுமன்றம் கூடிய போது நீதியமைச்சர் குறித்த சட்டமூலத்தை சமர்ப்பித்தார்.
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) தேசிய அரசுப் பேரவையின் 1977 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ,பாராளுமனற் ஓய்வூதிய சட்டத்தினை நீக்குவதற்காக இந்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
தேசிய அரசு பேரவையின் 1977ஆம் ஆண்டு 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதிய சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலம் கடந்த வாரம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரின் ஆணையின் பிரகாரம் இந்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சந்தேகம் களைவதற்காக, இந்த சட்டம் செயற்பட ஆரம்பிக்கும் தினத்துக்கு முன்னதாக, தேசிய அரசு பேரவையின் 1977ஆம் ஆண்டு 1ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதிய சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய, 1982ஆம் ஆண்டு 1ஆம் இலக்க சட்டத்தின் 9ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளுக்கமைய அல்லது 1990ஆம் ஆண்டு 47ஆம் இலக்க சட்டத்தின் 9ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகளின் கீழ் ஓய்வூதியம் பெறும் யாராவது ஒருவருக்கு இந்த சட்டம் செயற்பட ஆரம்பிக்கும் தினம் மற்றும் அந்த தினத்திற்கு பின்னர் அந்த ஓய்வூதியம் பெறுவது நிறுத்தப்படவேண்டும் என இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





