டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவை பிணையில் விடுவித்து கம்பஹா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பிலான வழக்கு 09-01-2026அன்று கம்பஹா நீதிவான் சிலனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து நீதிவான் இதற்கான உத்தரவை பிறப்பித்தார். 2019 ஆம் ஆண்டு மே 5 ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய முக்கியஸ்தரான மதுஷ் குற்றப்புனாய்வு தினைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலம் ஒன்றினை மையப்படுத்தி வெலிவேறிய பகுதியில் வைத்து 2 மெகசின்களையும் 2 கைதுப்பாக்கிகளையும் குற்றப்புனாய்வு பிரிவு கைப்பற்றியிருந்தது. அதில் ஒரு கைதுப்பாக்கி உத்தியோக பூர்வமாக இராணுவத்தினூடாக டக்ளஸ் தேவானந்தவுக்கு வழங்கப்பட்டது என்பது விசாரணைகளின் உறுதி செய்யப்பட்ட பின்னர், 2019ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தவை விசாரணைக்கு அழைத்து குற்றப்புலனாய்வு திணைக்களம் இரண்டு முறை அறிவித்தல் அனுப்பியிருந்தது. எனினும் அவர் அந்த விசாரணைகளுக்கு ஆஜராகி இருக்காத நிலையில் அந்த விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன்படி இது குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதன்போது குற்ற புலனாய்வு திணைக்களம் சார்பாக மனிதப்படுகொலை விசாரணைகள் தொடர்பிலான பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த தலைமையிலான குழுவினர் ஆஜராகி விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தனர். சந்தேகநபரான டக்ளஸ் தேவானந்தா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான குழுவினர் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர். பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த தலைமையிலான குழு நீதிமன்றில் விடயங்களை முன்வைத்து டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார். இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியத்துக்குப் பொறுப்பாக உள்ள மேஜர் ஒருவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவுக்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்படாத 30 துப்பாக்கிகளை அவர் மீள கையளித்திருப்பதாக குற்றபுலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர். குறித்த 30 துப்பாக்கிகளும் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்படாதவை என்பதால் அது குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த துப்பாக்கிகள் ஏதேனும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா அது எவ்வாறு அவருக்கு கிடைக்கப்பெற்றது போன்ற விடயங்களை வெளிப்படுத்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். இதேநேரம் உத்தியோகபூர்வமாக 2000 ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் திகதி இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியத்திலிருந்து டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ரி-56 ரக துப்பாக்கிகள் 13, அதற்கு பயன்படுத்தப்படும் 1,560 தோட்டாக்கள், ஆறு கை துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படும் 100 தோட்டாக்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதில் 2016 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி டக்ளஸ் தேவானந்தா ரி- 56 ரக துப்பாக்கிகளில் ஒன்பதை மீள கையளித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மீதமாக மேலும் 4 ரி- 56 ரக துப்பாக்கிகளையும், 6 கைதுப்பாக்கிகளையும் அவர் இன்னும் கையளிக்கவில்லை என இராணுவத்தினர் தமக்கு அறிவித்திருப்பதாக, இராணுவ மேஜரிடம் வழங்கிய வாக்குமூலம் ஊடாக தெரியவந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்தனர். இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தவுக்காக பிணை கோரி ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விடயங்களை முன்வைத்தார். அதன்படி குற்றபுலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள விடயங்களின் அடிப்படையில் துப்பாக்கிகள் கட்டளை சட்டம் தண்டனை சட்ட கோவை மற்றும் பொதுச்சொத்து துஸ்பிரயோக சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் பொதுச்சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழான விடயங்கள் தொடர்பாக மட்டும் பிணை பெற்றுக் கொள்வதற்கு விசேட காரணிகள், அவசியமாவதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார். துப்பாக்கிகள் கட்டளை சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களும் தண்டனை சட்டக்கோவையின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் நீதிவானுக்கு பிணை அளிக்கும் அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி விசேட காரணிகளை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரியஸ் டக்ளஸ் தேவானந்தா விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் போது தமிழ் மக்கள் சார்பில் விடுதலை புலிகளுக்கு எதிராக இருந்த ஒரே தலைவர் என்பதை சுட்டிக்காட்டினார். அதன்படி அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலை புலிகளின் தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும், 13 தடவைகள் அவ்வாறு இலக்கு வைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தவை பிணையில் விடுவித்து கம்பஹா நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பிலான வழக்கு 09-01-2026 அன்று கம்பஹா நீதிவான் சிலனி பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்து நீதிவான் இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.
2019 ஆம் ஆண்டு மே 5 ஆம் திகதி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடைய முக்கியஸ்தரான மதுஷ் குற்றப்புனாய்வு தினைக்களத்துக்கு வழங்கிய வாக்குமூலம் ஒன்றினை மையப்படுத்தி வெலிவேறிய பகுதியில் வைத்து 2 மெகசின்களையும் 2 கைதுப்பாக்கிகளையும் குற்றப்புனாய்வு பிரிவு கைப்பற்றியிருந்தது.
அதில் ஒரு கைதுப்பாக்கி உத்தியோக பூர்வமாக இராணுவத்தினூடாக டக்ளஸ் தேவானந்தவுக்கு வழங்கப்பட்டது என்பது விசாரணைகளின் உறுதி செய்யப்பட்ட பின்னர், 2019ஆம் ஆண்டு டக்ளஸ் தேவானந்தவை விசாரணைக்கு அழைத்து குற்றப்புலனாய்வு திணைக்களம் இரண்டு முறை அறிவித்தல் அனுப்பியிருந்தது.
எனினும் அவர் அந்த விசாரணைகளுக்கு ஆஜராகி இருக்காத நிலையில் அந்த விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா விசாரணையின் பின்னர் கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கம்பஹா நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அதன்படி இது குறித்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதன்போது குற்ற புலனாய்வு திணைக்களம் சார்பாக மனிதப்படுகொலை விசாரணைகள் தொடர்பிலான பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த தலைமையிலான குழுவினர் ஆஜராகி விசாரணையின் முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்தனர்.
சந்தேகநபரான டக்ளஸ் தேவானந்தா சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைமையிலான குழுவினர் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர். பொலிஸ் பரிசோதகர் பொல்வத்த தலைமையிலான குழு நீதிமன்றில் விடயங்களை முன்வைத்து டக்ளஸ் தேவானந்தா தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டார்.
இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியத்துக்குப் பொறுப்பாக உள்ள மேஜர் ஒருவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவுக்கு உத்தியோகப்பூர்வமாக வழங்கப்படாத 30 துப்பாக்கிகளை அவர் மீள கையளித்திருப்பதாக குற்றபுலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றத்துக்கு தெரிவித்தனர். குறித்த 30 துப்பாக்கிகளும் உத்தியோகப்பூர்வமாக வழங்கப்படாதவை என்பதால் அது குறித்து தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த துப்பாக்கிகள் ஏதேனும் குற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா அது எவ்வாறு அவருக்கு கிடைக்கப்பெற்றது போன்ற விடயங்களை வெளிப்படுத்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேநேரம் உத்தியோகபூர்வமாக 2000 ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் திகதி இராணுவத்தின் மத்திய ஆயுதக் களஞ்சியத்திலிருந்து டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட ரி-56 ரக துப்பாக்கிகள் 13, அதற்கு பயன்படுத்தப்படும் 1,560 தோட்டாக்கள், ஆறு கை துப்பாக்கிகள் மற்றும் அதற்கு பயன்படும் 100 தோட்டாக்கள் தொடர்பிலும் விசாரணைகள் இடம்பெறுவதாக சி.ஐ.டியினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதில் 2016 ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் திகதி டக்ளஸ் தேவானந்தா ரி- 56 ரக துப்பாக்கிகளில் ஒன்பதை மீள கையளித்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். மீதமாக மேலும் 4 ரி- 56 ரக துப்பாக்கிகளையும், 6 கைதுப்பாக்கிகளையும் அவர் இன்னும் கையளிக்கவில்லை என இராணுவத்தினர் தமக்கு அறிவித்திருப்பதாக, இராணுவ மேஜரிடம் வழங்கிய வாக்குமூலம் ஊடாக தெரியவந்ததாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தவுக்காக பிணை கோரி ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் விடயங்களை முன்வைத்தார். அதன்படி குற்றபுலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் முன்வைத்துள்ள விடயங்களின் அடிப்படையில் துப்பாக்கிகள் கட்டளை சட்டம் தண்டனை சட்ட கோவை மற்றும் பொதுச்சொத்து துஸ்பிரயோக சட்டம் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருப்பதாகவும், அதில் பொதுச்சொத்து துஷ்பிரயோக சட்டத்தின் கீழான விடயங்கள் தொடர்பாக மட்டும் பிணை பெற்றுக் கொள்வதற்கு விசேட காரணிகள், அவசியமாவதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டினார்.
துப்பாக்கிகள் கட்டளை சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களும் தண்டனை சட்டக்கோவையின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் நீதிவானுக்கு பிணை அளிக்கும் அதிகாரம் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அதன்படி விசேட காரணிகளை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரியஸ் டக்ளஸ் தேவானந்தா விடுதலை புலிகளுக்கு எதிரான போரின் போது தமிழ் மக்கள் சார்பில் விடுதலை புலிகளுக்கு எதிராக இருந்த ஒரே தலைவர் என்பதை சுட்டிக்காட்டினார். அதன்படி அவர் பல்வேறு சந்தர்ப்பங்களில் விடுதலை புலிகளின் தாக்குதல்களுக்கு உள்ளானதாகவும், 13 தடவைகள் அவ்வாறு இலக்கு வைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் குறிப்பிட்டார்.





