உண்மை, நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிக்க அரசாங்கம் உத்தேசம்
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவது குறித்து முன்னைய அரசாங்கத்தினால் ஆராயப்பட்டுவந்த போதிலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுத்திருக்கவில்லை.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவிருப்பதாகவும், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த அலுவலகங்களை ஒரே கட்டமைப்பின்கீழ் கொண்டுவருவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அறியமுடிகின்றது.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறுவுவது குறித்து முன்னைய அரசாங்கத்தினால் ஆராயப்பட்டுவந்த போதிலும், தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுத்திருக்கவில்லை.
இந்நிலையில் அரசாங்கம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவிருப்பதாகவும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்ற கட்டமைப்புக்களை ஒரு பொதுக்கட்டமைப்பின்கீழ் கொண்டு வருவதற்கான சாத்தியப்பாடு குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இதுபற்றி அறிந்த ஒருவர் தன்னிடம் கூறியதாக தேசிய சமாதானப்பேரவையின் பணிப்பாளரும், சிவில் செயற்பாட்டாளருமான கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
அதேவேளை மேற்குறிப்பிட்டவாறு பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துடன் தொடர்புடைய சகல கட்டமைப்புக்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவருவதாக இருந்தால், அக்கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.





