சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அனுதாபம்
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று, இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவரை சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.
சுவிட்சர்லாந்து தெற்குப் பிரதேசத்தில் பனிச்சறுக்கு விளையாட்டுக்கென பிரசித்தமான சுற்றுலாப் பயண தளத்தில் (ஆல்பைன் ஸ்கி ரிசார்ட்) ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளதோடு, 115 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். இதன் போது உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அனுதாபம் தெரிவித்துள்ளார்.
கிரான்ஸ் - மொன்டானாவில், புத்தாண்டு தினமான ஜனவாரி 1ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் நகர மையத்தில் அமைந்துள்ள 'லெ கான்ஸ்டலேஷன் (Le Constellation)' என்ற பிரபலமான விற்பனையகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதோடு, பல நாடுகளைச் சேர்ந்த பலரும் இந்த விபத்தை எதிர்கொண்டனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று, இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவரை சந்தித்து தனது அனுதாபங்களைத் தெரிவித்தார். அவ்வாறே அங்கு வைக்கப்பட்டிருந்த விசேட நினைவுக்குறிப்பேட்டில் தனது அனுதாபச் செய்தியையும் பதிவிட்டுள்ளார்.





