பிரதமருடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு
புல்பிறைட் சர்வதேச புலமைப்பரிசில் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார்.
இலங்கைக்கான அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தூதுவர் ஜுலி சங்கிற்கும் பிரதமர் ஹரணி அமரசூரியவுக்கும் இடையிலான சந்திப்பொன்று பாராளுமன்றத்தில் 20-11-2025 அன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது தூதுவர் ஜுலி சங் ஐக்கிய நாடுகள் சபையினால் மேற்கொள்ளப்படும் சமாதானப் படையின் கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டம் குறித்தும், ஏனைய ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் விளக்கப்படுத்தியதுடன், புல்பிறைட் சர்வதேச புலமைப்பரிசில் பரிமாற்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும் எடுத்துரைத்தார்.
சர்வதேச கல்வி மற்றும் கலாசாரப் பரிமாற்றத்தை அடிப்படையாகக் கொண்டு, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஒரு முன்னணிப் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டமான புல்பிறைட் புலமைப்பரிசில் நிகழ்ச்சித்திட்டம், 160க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மாணவர்களுக்கும், கல்விமான்களுக்கும் கற்றல், கற்பித்தல், ஆராய்ச்சி, கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் பரஸ்பர உறவுகளை வளர்த்துக்கொள்ளுதல் ஆகியவற்றுக்கான வாய்ப்பை வழங்கி வருகின்றது.
பரீட்சையை மையமாகக் கொண்ட ஒரு கட்டமைப்பிலிருந்து ஒத்துழைப்புமிக்க கற்றல்-கற்பித்தல் சூழலை உருவாக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்விச் சீர்திருத்தங்களுக்காக, கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம் மற்றும் தேசிய கல்வி நிறுவனம் ஆகிய துறைகளில் தொழில்நுட்ப நிபுணத்துவ உதவியை அதிகரித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய பிரதமர், நாட்டின் மனித அபிவிருத்தி முன்னுரிமைகளுடன் ஒத்துப்போகும் அறிவாளிகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.





