Breaking News
இலங்கையில் அவசர கால சட்டம் பிறப்பிப்பு
பொது வாழ்க்கையை நிலைநிறுத்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதற்கும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் நல்வாழ்வை உறுதி செய்வதற்கும், பொது வாழ்க்கையை நிலைநிறுத்த அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் சேவைகளை வழங்குவதை உறுதி செய்வதற்கும் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் சனத் நந்தித குமநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி 28-11-2025அன்று முதல் அமலுக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.





