குறைபயன்பாட்டு காணிகளை பயன்பாட்டுக்காக முதலீட்டாளர்களுக்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
குறைபயன்பாட்டு காணிகள் அல்லது சொத்துக்களை உயரிய வகையிலான பயன்பாட்டுக்காக முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அந்த வகையில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழுள்ள இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனி போன்ற நிறுவனங்களின் கீழுள்ள குறைப்பயன்பாட்டுக் காணிகள்ஃசொத்துக்களில் முதலாம் கட்டமாக அடையாளங் காணப்பட்டுள்ள குறைப்பயன்பாட்டுக் காணிகளை கடந்த ஆண்டு ஜூன் 2ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தின் பிரகாரம், பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு ஒப்படைப்பதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதில் முதலாம் கட்டத்தில் உள்வாங்கப்படாத குறைப்பயன்பாட்டுக் காணிகள்ஃசொத்துக்களை அந்தந்த நிறுவனங்களின் கீழ் தொடர்ந்தும் காணப்படுகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கீழ்வரும் குறைப்பயன்பாட்டு காணிகள் சொத்துக்களுக்குப் பொருத்தமான முதலீட்டாளர்களுக்கு சரியான பெறுகை முறையைக் கடைப்பிடித்து குத்தகை அடிப்படையில் வழங்குவதற்காக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதற்கமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் அடையாளங் காணப்பட்டுள்ள இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபை மற்றும் எல்கடுவ பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான குறைப்பயன்பாட்டுக் காணிகள்ஃசொத்துக்கள், தேயிலைச் சக்தி நிதியத்திக்குச் சொந்தமான மாத்தறை மாவட்டத்திலுள்ள 40.48 ஹெக்ரெயார் மாவரல தோட்டக் காணி மற்றும் தேயிலைத் தொழிற்சாலை மற்றும் இலங்கை மரமுந்திரிகை கூட்டுத்தாபனம் பயன்படுத்தி வருகின்ற கொண்டச்சி தோட்டத்தின் 1,541 ஹெக்ரெயார் குறைப்பயன்பாட்டுக் காணி என்பவற்றை இவ்வாறு முதலீட்டாளர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.





