விமலின் சத்தியாக்கிரகத்திற்கு எதிரான பொலிஸாரின் கோரிக்கை நிராகரிப்பு
தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு எதிராக தலங்கம பொலிஸார் 12-01-2026 அன்று கடுவலை நீதிவான் நீதிமன்றில் கோரிய கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையில் ஆரம்பமான தொடர்ச்சியான சத்தியாக்கிரக போராட்டத்தை தடுத்து உத்தரவிடக் கோரிய பொலிஸாரின் கோரிக்கையை கடுவலை நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவன்ச மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் குழுவுக்கு எதிராக தலங்கம பொலிஸார் 12-01-2026 அன்று கடுவலை நீதிவான் நீதிமன்றில் கோரிய கோரிக்கையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த சத்தியாக்கிரக போராட்டத்தை முன்னெடுத்து செல்ல தடை விதிக்க முடியாது என அரிவித்த கடுவலை நீதிவான் அருன இந்த்ரஜித் புத்ததாச, அவ்வாறு முன்னெடுத்து செல்லும் போது கடைப்பிடிக்கவேண்டிய விடயங்கள் குறித்து நிபந்தனை விதித்துள்ளார்.
அதன்படி, குறித்த போராட்டம் அனைத்து வகையிலும் சட்டத்தின்படி அமைதியான போராட்டமாக இருக்க வேண்டும் எனவும் பெலவத்தை-பன்னிப்பிட்டிய வீதியை பயன்படுத்தும் பொதுமக்களுக்கும் பாதசாரிகளுக்கும் எந்த இடையூறும் இல்லாமல் போராட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் நீதிவான் நிபந்தனை விதித்தார்.
இதனைவிட உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் மற்றும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் போராட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் மர்றும் கல்வி அமைச்சின் வாயிலை மறிக்கக் கூடாது எனவும் நிபந்தனை விதித்துள்ள நீதிமன்றம் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் குறித்த நீதிமன்ற உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





