அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்திலிருந்து விலகும் சீனாவின் நிறுவனம்
அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தின் கட்டுமானத்தை நிறுத்த சுற்றுச்சூழல் அமைச்சு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் முதல் கேபிள் கார் திட்டமான அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தின் முதலீட்டாளர்களான சீனாவின் ஆம்பர் அட்வென்ச்சர் நிறுவனம், இலங்கை முதலீட்டு சபைத் திட்டத்திலிருந்து விலகுவதாக உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .
தித்வா சூறாவளி காரணமாக அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக சமூக ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியான தகவலைத் தொடர்ந்து, அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்தின் கட்டுமானத்தை நிறுத்த சுற்றுச்சூழல் அமைச்சு முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்புலுவாவ கேபிள் கார் திட்டம் சீன மற்றும் அமெரிக்க முதலீடுகளின் கீழ் செயல்படுத்தப்பட்டது, மேலும் அதன் கட்டுமானத்தில் தொடர்ச்சியான இடையூறுகள் காரணமாக இந்த முதலீட்டாளர்கள் சிரமத்துக்குள்ளானதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கை முதலீட்டு சபையின் கொள்கைகள் மற்றும் நடைமுறை விதிகளுக்கு உட்பட்டு அம்புலுவாவ கேபிள் கார் திட்டத்துக்கு தேவையான அனைத்து அனுமதிகளும் ஒப்புதல்களும் பெறப்பட்டதாகவும் , மேலும் இத்திட்டதை முன்னெடுக்க விடாது தொடர்ச்சியாக இடையூறு செய்தமையால் எதிர்பாராத இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக சீன நிறுவனமான ஆம்பர் அட்வென்ச்சர் நிறுவனம், சுட்டிகாட்டியுள்ளது.
மேலும் , ஏற்பட்ட இழப்புகளை மீட்க சர்வதேச இழப்பீட்டு நீதிமன்றத்தில் நிறுவனம் புகார் அளிக்கும் என நிறுவனத்தின் இயக்குனர் யுவான் யூபிங் இலங்கை முதலீட்டு சபைக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.





