கனடாவில் அமைச்சரான இலங்கைத் தமிழர்
.
ரொறன்ரோ நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) கனேடிய அமைச்சரவையில் அரச - பழங்குடியின உறவுகளுக்கான அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று ஏழு அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதிய அமைச்சர்களை நியமித்தார். அதில் ஒருவராக கரி ஆனந்தசங்கரியும் இடம்பிடித்துள்ளார்.
கரி ஆனந்தசங்கரி என அழைக்கப்படும் சத்தியசங்கரி ஆனந்தசங்கரி கனடிய அரசியல்வாதியும், லிபரல் கட்சி உறுப்பினரும், மனித உரிமை வழக்கறிஞரும் ஆவார்.
இலங்கைத் தமிழரான இவர் 2015 அக்டோபர் 19 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பில் இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார்.

கனேடிய லிபரல் கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். புதிதாக உருவாக்கப்பட்ட இசுக்கார்பரோ-ரூச் பார்க் தொகுதியில் அக்கட்சியின் சார்பில் போட்டியிட்டு அவரை எதிர்த்து போட்டியிட்ட பழைமைவாதக் கட்சியின் வேட்பாளரைத் தோற்கடித்து நாடாளுமன்றம் சென்றிருந்தார்.
இவர் நீண்ட காலமாக மனித உரிமைகள் பிரச்சினைகளை உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வாதிட்டு வருகிறார்.
பல வருடங்களாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உட்பட பல்வேறு மன்றங்களில் கலந்துகொண்டவராவார்.