கல்வி சீர்திருத்த செயற்பாடுகளில் விளக்கக்காட்சி மாத்திரமே உள்ளது: எதிர்க்கட்சித்தலைவர்
பாடசாலைகளுக்கு போதுமான வளங்கள் வழங்காமல் எப்படி அரசாங்கம் புதிய கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என கேட்கிறேன்.
கொள்கை வகுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது முறையான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படு இறுதித் தீர்மானங்களுக்கு வரும் வழமை அமைந்து காணப்படுகிறது. ஆனால் அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்த செயற்பாடுகளில் விளக்கக்காட்சி மாத்திரமே முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே, தற்போதைய கல்விச் சீர்திருத்த நடவடிக்கையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளததென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 22-01-2026அன்று நடைபெற்ற புதிய கல்வி மறுசீரமைப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், வெஸ்ட்மின்ஸ்டர் முறைமையின் கீழ் கொள்கை வகுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது, வெள்ளை அறிக்கை மற்றும் பச்சை அறிக்கை முன்வைக்கப்படும் சம்பிரதாயத்தின் மூலம் முறையான கலந்துரையாடல் முன்னெடுக்கப்படு இறுதித் தீர்மானங்களுக்கு வரும் வழமை அமைந்து காணப்படுகிறது.
என்றாலும், தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்த செயற்பாடுகளில் அவ்வாறன எந்தப் பத்திரங்களையும் முன்வைக்காமல், வெறுமனே விளக்கக்காட்சி மாத்திரமே முன்வைக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, தற்போதைய கல்வி சீர்திருத்த நடவடிக்கையில் நெருக்கடி நிலையொன்று எழுந்து காணப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தி வகுத்த கல்விக் கொள்கையில் நவீன உலகிற்கு ஏற்ற கல்வி முறைமைகள் காணப்படுகின்றன. இது பௌதீக மற்றும் மனித வளங்கள் சார்ந்த குறைபாடுகள் எதுவும் நிலவாமல் முன்னெடுக்கப்பட வேண்டும்.. இருந்தபோதிலும், கடும் வளப் பற்றாக்குறை நிலவும் சமயத்தில் தற்போதைய அரசாங்கத்தின் இந்த கல்விக் கொள்கை முன்னெடுக்கப்படுகின்றது. எனவே, இந்த வளப் பற்றாக்குறைகளையும் நிவர்த்தி செய்து வைப்பதற்கு நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோன்று எமது கல்வி திட்டத்தில் பாரிய குறைபாடுகள் இருக்கின்றன. ஆனால் அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்பில் இந்த குறைபாடுகளுக்கு எந்த தீர்வும் இல்லை. என்றாலும் அரசாங்கத்தின் கல்வி மறுசீரமைப்புக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
மாறாக ஆபாச வலைத்தலங்கள் பதிவிடப்பட்டிருப்பதற்கே எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் அரசாங்கம் ஆபாச வலைத்தலம் பதவிடப்பட்டிருப்பதை ஏற்றுக்கொண்டு, அதற்கு மாற்றமான நடவடிக்கை எடுக்காமல், எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், கல்வி மறுசீரமைப்பை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதாக, தவறை எங்கள் மீது சுமத்த முயற்சிக்கிறது.
ஆனால் கல்வி மறுசீரமைப்பில் பிரச்சினைகள் இருப்பதால்தான் ஜனாதிபதி 6ஆம் வகுப்புக்கான கல்வி மறுசீரமைப்பை அடுத்த வருடத்துக்கு பிற்படுத்த தீர்மானித்திருக்கிறார். பிரதமரின் கல்வி மறுசீரமைப்பில் பிழை இருப்பதாக ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். அதேநேரம் பாடசாலைகளுக்கு போதுமான வளங்கள் வழங்காமல் எப்படி அரசாங்கம் புதிய கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்ள முடியும் என கேட்கிறேன்.
அதனால் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு கேட்கின்றனர். விவாத்துக்கு வரவேண்டியதில்லை. பாடத்தொகுப்பில் இருக்கும் தவறுகளென நாங்கள் சுட்டிக்காட்டி இருக்கும் விடயங்களுக்கு முடிந்தால் பதிலளிக்கவேண்டும். கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்ள அரசாங்கம் பாடசாலைகளுக்கு அதற்கு தேவையான வளங்களை வசதிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறதா என கேட்கிறறேன். அதனால் கல்வி மறுசீமைப்புக்கு நாங்கள் ஒருபோதும் எதிர்ப்பு இல்லை. மாறாக ஆபாச வலைத்தலத்துக்கே எதிர்ப்பு என்றார்.





