ரமேஷ் பத்திரன மீண்டும் பெரமுன கட்சியில் இணைவு
ரமேஷ் பத்திரன ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
காலி மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் அமைச்சர் ரமேஷ் பத்திரன , ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார். அதனுடன்,பெந்தர - எல்பிட்டிய தேர்தல் தொகுதியின் அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில், 22-01-2026அன்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அவர்களிடமிருந்து அவர் தனது நியமன கடிதத்தை பெற்றுக்கொண்டார்.
ரமேஷ் பத்திரன ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சுகாதார தொழில்நுட்ப நிபுணர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் இணைந்து, இன்று காலி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் குழுவொன்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்தனர்.
இதனடிப்படையில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ரமேஷ் பத்திரன தனது ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





