மளிகை செலவு சுமையை குறைக்க மத்திய அரசு புதிய தள்ளுபடி திட்டம்
இது, வாழ்வுச் செலவைக் குறைக்கும் விரிவான அரசுத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
மளிகைப் பொருட்களின் உயர்ந்த விலையால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் செலவுச் சுமையை சமாளிக்கும் நோக்கில், ஜிஎஸ்டி (GST) வரிச்சலுகைத் தொகையை உயர்த்தும் அறிவிப்பை பிரதமர் மார்க் கார்னி திங்கள்கிழமை வெளியிட உள்ளார். இது, வாழ்வுச் செலவைக் குறைக்கும் விரிவான அரசுத் திட்டங்களின் ஒரு பகுதியாகும்.
பெயர் குறிப்பிட வேண்டாம் என்ற நிபந்தனையில் பேசிய இரண்டு மூத்த அரசு தரப்பு வட்டாரங்களின் தகவலின்படி, காலாண்டுதோறும் வழங்கப்படும் ஜிஎஸ்டி தொகை அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தமாக 25 சதவீதம் வரை உயர்த்தப்படும். இந்த நடவடிக்கையால் சுமார் 1.2 கோடி கனடியர்கள் பயனடைவார்கள் என மதிப்பிடப்படுகிறது.
இதனுடன், ஜூன் மாதத்தில் ஒருமுறை 50 சதவீத கூடுதல் தொகையும் வழங்கப்படும். இந்த புதிய திட்டம் “கனடா மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் நலத்திட்டம்” (Canada Groceries and Essentials Benefit) என்ற பெயரில் செயல்படுத்தப்படும்.





