Breaking News
வங்காளதேசத்தில் இந்து இளைஞர் தீபு தாஸ் கூட்டுக் கொலை வழக்கு: இரண்டாவது குற்றவாளி கைது
நாட்டில் மத சிறுபான்மையினர் மீது நடைபெறும் தாக்குதல்கள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்த்த வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
வங்காளதேசத்தில் உள்ள மைமென்சிங் மாவட்டத்தில் இந்து இளைஞர் தீபு தாஸை கூட்டமாக தாக்கி கொடூரமாக கொலை செய்த சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர். நாட்டில் மத சிறுபான்மையினர் மீது நடைபெறும் தாக்குதல்கள் குறித்து சர்வதேச கவனத்தை ஈர்த்த வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக, 22 வயதான முகம்மது ராஜிப் என்பவரை காசிபூர் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை டிடெக்டிவ் பிராஞ்ச் போலீஸார் கைது செய்தனர். கொலை நேரத்தில் தீபு தாஸ் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்ததாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்..





