கோட்டாபயவின் கண்காணிப்பிலேயே வடக்கு - கிழக்கு இருக்க வேண்டும்!
எல்லாவல மேதானந்த தேரரின் கருத்தை நாம் வரவேற்கின்றோம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று சிங்களப் பிரமுகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கிழக்கைப் போன்று தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் வடக்கிலும் ஜனாதிபதி விசேட செயலணியை நிறுவ வேண்டும் எனவும் அவர்கள் ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இது தாமதமின்றி நிறுவப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச ஆகியோரும் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். கிழக்கைப் போன்று தொல்பொருள் இடங்களை அடையாளம் காண்பதற்கும் பாதுகாப்பதற்கும் வடக்கிலும் ஜனாதிபதி விசேட செயலணியை நிறுவ வேண்டும் என்ற எல்லாவல மேதானந்த தேரரின் கருத்தை நாம் வரவேற்கின்றோம்.
வடக்கு, கிழக்கில் சிங்கள - பௌத்தர்களின் தொல்பொருள் இடங்கள் பயங்கரவாதிகளின் காலத்தில் திட்டமிட்டு மறைக்கப்பட்டன. சில இடங்கள் அழிக்கப்பட்டன.
இவற்றை நாம் அடையாளம் கண்டு பாதுகாக்க வேண்டும். வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல மாகாணங்களும் பௌத்த - சிங்களவர்களுக்குச் சொந்தமானவை. இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.