வைத்தியர் ருக்ஷான் பெல்லன குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலை
காதாரத் துறையில் மருந்து மாபியாக்களின் ஊடுருவல் இன்றும் தொடர்கிறது். நிர்வாகத் துறையில் உள்ள அதிகாரிகளே இதற்கு உடந்தையாக உள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன, 27-01-2026அன்று வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.
கொலை முயற்சி தொடர்பான வழக்கு விசாரணைக்காக விடுக்கப்பட்ட அழைப்பாணைக்க அமையச் சமூகமளித்த அவரிடம், அதிகாரிகள் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாக்குமூலம் பதிவு செய்தனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராகக் கடமையாற்றிய வைத்தியர் ருக்ஷான் பெல்லன, ஊடகங்கள் வாயிலாகச் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டமை மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமைக்காக, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சினால் கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதேவேளை வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர் குறிப்பிடுகையில், வைத்தியர் அனில் ஜசிங்கவைக் கொலை செய்ய முயற்சி செய்ததாக அசேல சம்பத் என்பவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுத் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே இன்று வருகை தந்தேன். ஊழல் மோசடிகளை வெளிப்படுத்தியமையால் என் மீது வன்மத்துடன் செயற்படுகின்றனர். அனில் ஜசிங்க போன்றோர் பதவியில் இருக்கும் வரை எங்களைப் போன்றவர்கள் வீடுகளில் இருக்க வேண்டியதுதான். தற்போது நான் மகிழ்ச்சியாகவே உள்ளேன்.
மேலும், சுகாதாரத் துறையில் மருந்து மாபியாக்களின் ஊடுருவல் இன்றும் தொடர்கிறது். நிர்வாகத் துறையில் உள்ள அதிகாரிகளே இதற்கு உடந்தையாக உள்ளனர். . 2018 ஆம் ஆண்டு முதல் நாட்டில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் தற்போதைய தொழிற்சங்கப் போராட்டங்களுக்குப் பின்னணியில் இந்த மாபியாக்களே இருப்பதுடன், இலவச சுகாதார சேவையைத் தனியார் மயமாக்குவதே அவர்களின் நோக்கம் என்றார்.





