சமன் ஏகநாயக்கவுக்கு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல்: ரணில் தவறிழைக்கவில்லை
வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபரான ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானாரார். அவருக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான திலக் மாரப்பன, அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியாவுக்கு முன்னெடுத்த விஜயமானது தனிப்பட்ட பயணம் என்பது தொடர்பில் மன்றில் முன்வைக்கப்பட்ட சான்றுகள் குறித்து நீதிமன்றம் திருப்தியடைவதாக கோட்டை நீதிவான் இசுசு நெத்திகுமார அறிவித்தார்.
அதனடிப்படையில் குறித்த வழக்கு விசாரணைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அதன் விசாரணைகளை அவசரமாக முடிக்கவும் அவர் சி.ஐ.டி.க்கு உத்தரவிட்டார்.
அதேநேரம் முன்னள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீதான விசாரணை ஒரு மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் மார்ச் மாதத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு எதிரான 16 மில்லியன் ரூபாவுக்கு மேல் அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு கொழும்பு கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போதே சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இந்த விடயத்தை சி.ஐ.டி. அதிகாரிகளுடன் மன்றில் ஆஜராகி வெளியிட்டார்.
இதற்கிடையில், இந்த சம்பவத்தில் 2 ஆவது சந்தேகநபராக நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்கவை பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சந்தேகநபரான ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றத்தில் ஆஜரானாரார். அவருக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகளான திலக் மாரப்பன, அனுஜ பிரேமரத்ன உள்ளிட்ட குழுவினர் ஆஜராகினர்.
முறைப்பாட்டாளர் தரப்பு சார்பில் சி.ஐ.டி.யின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, விசாரணை அதிகாரிகள் உள்ளிட்டோருடன் அரச சட்டவாதி சமதரி பியசேனவுடன் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் ஆஜரானார்.





