நாடளாவிய ரீதியில் 3553 சந்தேக நபர்கள் கைது
பொலிஸ்மா அதிபர் பிரியந்த விரசூரியவின் பணிப்புரைக்கமைய ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் குற்றசெயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
 
        
நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட போதைப்பொருள் வலையமைப்பை கண்டறியும் நடவடிக்கைக்கு அமைய கடந்த ஒருவார காலப்பகுதியில் போதைப்பொருளுடன் 3553 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ்மா அதிபர் பிரியந்த விரசூரியவின் பணிப்புரைக்கமைய ஏப்ரல் மாதம் 13 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸாரால் குற்றசெயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேற்படி நடவடிக்கையுடன் இணைந்ததாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சந்தேகநபர்கள் தொடர்பில் ஒக்டோபர் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 23 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்ட போதைப்பொருள் வலையமைப்பை கண்டறிதல் மற்றும் சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கைக்கு அமைய 3553 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கமைய நாடு முழுவதும் 3564 சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன்போது ஹெரோயினுடன் 1224 சந்தேகநபர்களும், ஐஸ் போதைப்பொருளுடன் 1214 சந்தேகநபர்களும், ஹேஸ் போதைப்பொருளுடன் 43 சந்தேகநபர்கள் மற்றும் கஞ்சா போதைப்பொருளுடன் 951 சந்தேகநபர்களும் கைதாகியுள்ளனர். மேலும் கஞ்சா செடி, போதை மாத்திரை, சட்டவிரோத சிகரெட்டுக்கள் ஆகியவற்றுடன் 132 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த நடவடிக்கைகளின் போது 1.600 கிலோ கிராம் ஹெரோயின், 3.565 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 11 கிலோ கஞ்சா, 6.377 கிலோ கிராம் ஹேஸ் மற்றும் 1468 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





 
  
