ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம், மாலைத்தீவு பாதுகாப்பு அமைச்சுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ஐந்து வருடகாலத்திற்கு 2012ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்டுள்ளதுடன், 2018ஆம் ஆண்டில் குறித்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையணிக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று ஐந்து வருடகாலத்திற்கு 2012ஆம் ஆண்டில் கையொப்பமிடப்பட்டுள்ளதுடன், 2018ஆம் ஆண்டில் குறித்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
இவ் ஒப்பந்தத்தின் செல்லுபடியாகும் காலம் 2023ஆம் ஆண்டில் முடிவடைந்த பின்னர், இருதரப்பினர்களுக்கிடையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், பயிற்சி வேலைத்திட்டங்களை ஒழுங்குபடுத்தல், பணிக்குழாம் பரிமாற்று நிகழ்ச்சி திட்டங்களை அமல்படுத்தல், ஒருங்கிணைந்த ஆய்வுகள் மற்றும் கற்கைகளை ஒழுங்குபடுத்தல், கல்விசார் வெளியீடுகள் மற்றும் ஏனைய தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளல் மற்றும் கலாச்சார மற்றும் மெய்வல்லுநர் விளையாட்டு பரிமாற்று நிகழ்ச்சித்திட்டங்கள் அமல்படுத்தல் போன்ற நோக்கங்களுடன் திருத்தப்பட்ட புதிய ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜெனரல் ஸ்ரீமத் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் மாலைதீவு பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையில் உத்தேச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





