Home » மருத்துவம் & சுகாதாரம் » சளியை விரட்டி அடிக்கும் மருந்துகள்

சளியை விரட்டி அடிக்கும் மருந்துகள்

சளி எளிதில் கரைந்து வெளியே வந்துவிடும்.

👤 Sivasankaran10 May 2020 1:17 PM GMT
சளியை விரட்டி அடிக்கும் மருந்துகள்
Share Post

சளி பிடித்து விட்டாலே பொதுவாக பலரும் அதிகளவில் டென்சனாகி விடுகிறார்கள். எளிய நாட்டு மருந்துகள் மூலமாக சளியை விரட்டி அடிக்கலாம்.

சித்தரத்தை வேர் நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும். அதை வாங்கி ஒரு சிறிய துண்டை நசுக்கி வாயில் அடக்கிக் கொண்டு, உமிழ்நீரை அவ்வப்பபோது விழுங்கினாலே போதும். தொண்டைக் கரகரப்பு நீங்கும். சளி எளிதில் கரைந்து வெளியே வந்துவிடும்.

கடுக்காயை தணலில் இட்டு சுட்ட பிறகு, அதன் தோலை சிறிதளவு வாயில் அடக்கி கொண்டால் சளி, இருமல் குறையும். அது மட்டுமல்லாமல், சதை வளர்ந்திருந்தாலோ அல்லது அழற்சி புண் ஏற்பட்டிருந்தாலோ குணமாகி விடும்.