Home » உலகச் செய்திகள் » ஈரானுடன் போரில் ஈடுபட்டால் அது நீண்ட காலம் நீடிக்காது - டிரம்ப்

ஈரானுடன் போரில் ஈடுபட்டால் அது நீண்ட காலம் நீடிக்காது - டிரம்ப்

ஜப்பானில் நடைபெறும் ஜி–20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், மாநாட்டுக்கு...

👤 Sivasankaran28 Jun 2019 3:14 PM GMT
ஈரானுடன் போரில் ஈடுபட்டால் அது நீண்ட காலம் நீடிக்காது - டிரம்ப்
Share Post

ஜப்பானில் நடைபெறும் ஜி–20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், மாநாட்டுக்கு மத்தியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, அவரிடம் ஈரான் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

டிரம்ப் அதற்கு பதிலளிக்கையில்,

"பிரச்சினைக்கு தீர்வு காண ஈரானுக்கு காலக்கெடு எதுவும் இல்லை. நிறைய அவகாசம் இருக்கிறது. அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க தேவையில்லை. ஈரான் விவகாரத்தில் கடந்த 3 நாட்களாக கூறி வருவது தான் எனது நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் இல்லை. அனைத்தும் சுமுகமாக முடியும் என்று நம்புகிறேன்'' எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே டிரம்ப் பேசும் போது, ஈரானுடன் போரில் ஈடுபட விரும்பவில்லை. ஒருவேளை போர் ஏற்பட்டால் அது நீண்ட காலம் நீடிக்காது. அமெரிக்கா எளிதில் வென்றுவிடும் எனக் கூறியிருந்தார்.