
சிறிலங்கா சவால் மற்றும் நெருக்கடியான தருணத்தில் உள்ளது, ஆனால் ஒரு ஜனநாயக மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் நேற்று தெரிவித்தார்.
பன்னாட்டு நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவதில் அமெரிக்காவின் பங்கை தனது நாடு பாராட்டுவதாகக் கூறிய சிறிலங்காப் பிரதிநிதி அலி சப்ரி உடனான சந்திப்பின் தொடக்கத்தில் கம்போடியாவில் ஆன்டனி பிளிங்கன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
கம்போடியாவில் நடைபெற்ற பிராந்திய கூட்டமொன்றில் இருவரும் சந்தித்துக் கொண்டனர்.