உயிரைக் கொல்லும் கொரோனா வைரஸ் தாக்குதலில் சீனாவிற்கு வௌியில் முதலாவது மரணம் பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய் ஏற்பட்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது.
44 வயதுடைய ஒரு மனிதர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த நபர் சீனாவின் வுஹான் நகரில் இருந்து பிலிப்பைன்ஸ் நோக்கி சென்றவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.