
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நீண்டகால ஆட்சியாளரும் ஜனாதிபதியுமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் வெள்ளிக்கிழமை காலமானதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அவருக்கு வயது 73.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 40 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு மற்றும் தனியார் துறைகளில் மூன்று நாள் பணி இடைநிறுத்தம், கொடிகள் அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவித்தது.
ஷேக் முகமது பின் சயீத் ஜனாதிபதி பதவிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், வாரிசு குறித்த உடனடி அறிவிப்பு எதுவும் இல்லை.