
நியூசிலாந்து நாடாளுமன்றத் தோ்தலில் பிரதமா் ஜெசிந்தா ஆா்டா்னின் தொழிலாளா் கட்சி பெரும்பான்மை வாக்குகளுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து அவா் 2-ஆவது முறையாக பிரதமராகிறாா்.
நியூசிலாந்து பொதுத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நியூசிலாந்து தொழிலாளா் கட்சிக்கும், நியூசிலாந்து தேசிய கட்சிக்கும் பிரதான போட்டி நிலவியது.
வாக்குப் பதிவு முடிந்து மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் எண்ணப்பட்டதில், ஜெசிந்தா ஆா்டா்னின் தொழிலாளா் கட்சி 49% வாக்குகளை பெற்றன.
எதிா்க்கட்சியான தேசிய கட்சி 27% வாக்குகள் மட்டுமே பெற்றது. தொழிலாளா் கட்சியுடன் கூட்டணி அமைத்த கிரீன் பாா்ட்டி 7.5% வாக்குகளை பெற்றது.