பரவும் கொரோனா வைரஸ் - அச்சத்தில் உலக நாடுகள்
237 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சீனாவில் உள்ள வுகான் மாகணத்தில் உள்ள ஒரு சந்தை பகுதியில் இருந்து முதல் முறையாக கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவியது. வவ்வாலை உணவாக கொள்ளும் கட்டுவிரியன் பாம்புகள் மூலமாக இந்த வைரஸ் பரவியுள்ளது.
பாம்புகளை சீனர்கள் உணவாக சாப்பிடுவதால் இந்த வைரஸ் அவர்களை தாக்கியுள்ளது. ஒருவர் மூலம் மற்றவர்களுக்கு உடனடியாக பரவும் இந்த கொரோனா வைரஸ். இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை இந்த வைரசால் 1287 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 237 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் சீன அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
ஐரோப்பாவிலும் கொரோனா வைரஸ் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு திரும்பிவந்த அந்நாட்டை சேர்ந்த 2 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சத்தில் உள்ளனர்.