பொருத்தமில்லாத வசனங்களை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதற்கு முன்னர் அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை: சபாநாயகர்
பாராளுமன்றத்தில் 11-11-2025 அன்று நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா , நிலையியல் கட்டளை 82/1இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க முற்பட்ட போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உரைகளின் போது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ள பொருத்தமில்லாத வசனங்களை ஹன்சாட்டில் இருந்து நீக்குவதற்கு முன்னர் அவற்றை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 11-11-2025 அன்று நடைபெற்ற அமர்வின் போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா , நிலையியல் கட்டளை 82/1இல் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க முற்பட்ட போதே சபாநாயகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சபாநாயகர் மேலும் அறிவித்ததாவது, ஹன்சாட்டில் உள்ள வசனங்கள் தொடர்பில் அதனை திருத்துவதற்கு முன்னர் அதனை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் அதாவது நீங்கள் அடங்கலாக (அர்ச்சுனா அடங்கலாக) பயன்படுத்தியுள்ள பொருத்தமில்லாத வசனங்களும் அதனுள் உள்ளன. அவற்றை ஆராய்வதற்காக செயலாளர் குழுவுக்கு அனுப்பி வைத்துள்ளேன் என்றார்.