Breaking News
வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர், பிரதமர் ஹரிணியுடன் சந்திப்பு
இருதரப்பு ஒத்துழைப்புக்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வத்திக்கான் வெளிவிவகார அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர், பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளார்.
04-11-2025 அன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இருதரப்பு ஒத்துழைப்புக்கள் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருடனான சந்திப்பில் கொழும்பில் உள்ள புனிதப் பேராயத் தூதரகத்தின் பொறுப்பாளர் மான்சிந்யோர் ராபர்டோ லுச்சினி மற்றும் புனிதப் பேராயத்தின் வெளியுறவுச் செயலகத்தின் இரண்டாவது செயலாளர் மான்சிந்யோர் டோமிஸ்லாவ் ஜுபாக் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





