கதுருவெலவ தனியார் பேருந்து விபத்தில் நால்வர் பலி : 24 பேர் காயம்
குறித்த பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பேரூந்தின் பின் புறத்தில் மோதியதால் இடம்பெற்ற இவ்விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
கதுருவெலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்தபோது, பின்னால் வந்த மற்றொரு தனியார் பேருந்து மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின் புறத்தில் மோதியதால் இடம்பெற்ற இவ்விபத்தில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 28 பேரும் சிகிச்சைக்காக குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி மூன்று ஆண்களும் ஒரு பெண்ணும் உயிரிழந்ததுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பின்னால் வந்த பேருந்து அதிவேகமாக பயணித்ததால் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்கள் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, விபத்து தொடர்பான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





