வத்திக்கான் முழுமையான ஒத்துழைப்பு: பேராயர் கல்லாகர் ஜனாதிபதிக்கு உறுதி
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் 04-11-2025 அன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் மூலம் இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டிய வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வத்திக்கான் ஆதரவளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான செயலாளர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் 04-11-2025 அன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தார்.
நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதன் மூலம் இலங்கையை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை பேராயர் பாரட்டியதுடன், பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் தேசிய ஒற்றுமையை மேம்படுத்தவும் இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு வத்திக்கான் ஆதரவளிக்கும் என்றும் உறுதியளித்துள்ளார்.
இலங்கைக்கும் வத்திக்கானுக்கும் இடையிலான அரை நூற்றாண்டு கால இராஜதந்திர உறவுகள் இந்நாட்டிற்கு பல நன்மைகளைத் பெற்றுத் தந்துள்ளது என்றும், அது ஆன்மீக ரீதியானது மட்டுமன்றி, நாட்டில் மனித கண்ணியத்தை மேம்படுத்துவதில் மிகவும் முக்கியமானதாக அமைந்ததாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.