‘ஹிட்லர்’ என்று விமர்சித்தாலும் எனது நடவடிக்கைகள் தொடரும்: ஜனாதிபதி அநுரகுமார திட்டவட்டம்
டந்த காலங்களில் போல் அல்லாமல் இந்தமுறை வரவு, செலவு திட்டத்துக்கு விருந்தினர் கலரியிக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் சபாநாயகரின் விருந்தினர்களாக வெளிநாட்டு தூதுவர்கள்,இராஜதந்திரிகள் பலரும் வகை தந்திருந்தனர்.
நாட்டின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யவதை அடிப்படையாகக்கொண்டு முதலீட்டாளர்களை ஊக்குவித்து உற்பத்தி பொருளாதாரத்தை அதிகரிப்பதற்கான பல்வேறு யோசனைகள் அடங்கிய 2026 ஆண்டிற்கான வரவு,செலவுத்திட்டம் நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வரவு, செலவு திட்ட உரை 4 மணித்தியாலம் 30 நிமிடம் வரை நீடித்திருந்தது. ஐ.தே .க. ஆட்சியில் நிதி அமைச்சராகவிருந்த ரொனி டி மெல் வரவு செலவுத்திட்ட உரையை 6 மணித்தியாலங்கள் நிகழ்த்தி சாதனை படைத்துள்ள நிலையில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 4 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் உரையாற்றி இரண்டாவது சாதனையாளராகவும் ஐ.தே .க. ஆட்சியில் நிதி அமைச்சராகவிருந்த ரவி கருணாநாயக்க 3 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் வரவு செலவுத்திட்ட உரை நிகழ்த்தி 3 ஆவது சாதனையாளராகவும் உள்ளனர்
பாராளுமன்றம் 07-11-2025 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கையாக அடுத்த வருடத்துக்கான வரவு செலவு திட்ட யோசனையை முன்வைப்பதற்காக ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவின் பெயரை அழைத்தார்.
அதன்போது சபைக்கு வெளியில் இருந்த ஜனாதிபதி, சபைக்குள் வரும்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் மேசையில் தட்டி வரவேற்றனர். என்றாலும் எதிர்க்கட்சியினர் அமைதியாக பார்த்துக்கொண்டிருந்தனர். பின்னர் ஜனாதிபதி தனது ஆசனத்துக்கு வந்து 1.35மணிக்கு வரவு, செலவு திட்ட உரையை ஆரம்பித்தார்.
வரவு, செலவு திட்ட உரையில் ஜனாதிபதி அபிவிருத்தி திட்டங்கள், மக்களுக்கான சலுகைகள் தொடர்பில் குறிப்பிடும் போது, ஆளும் கட்சியினர் மேசைகளில் தட்டி ஆதரவை வெளிப்படுத்தியதுடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த கட்சி தலைவர்கள் மற்றும் உறுப்பினர் ஆரம்பித்தில் அவரின் உரையை உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தனர்.என்றாலும் உரை ஆரம்பிக்கப்பட்டு சுமார ஒரு மணி நேரம் கடந்த செல்லும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் தங்களின் ஆசனங்களில் இருந்து எழுந்து அடிக்கடி சபைக்கு வெளியே சென்று வரவக்கூடியதாக இருந்ததுடன் ஒருசிலர் இறுதி நேரத்திலே சபைக்குள் வந்ததை காணக்கூடியதாக இருந்தது.
மேலும் கடந்த காலங்களில் போல் அல்லாமல் இந்தமுறை வரவு, செலவு திட்டத்துக்கு விருந்தினர் கலரியிக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படவில்லை. அதேநேரம் சபாநாயகரின் விருந்தினர்களாக வெளிநாட்டு தூதுவர்கள்,இராஜதந்திரிகள் பலரும் வகை தந்திருந்தனர்.
அத்துடன் அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள். அமைச்சுக்களின் அதிகாரிகளென நூற்றக்கணக்கானவர்கள் வருகை தந்திருந்தனர். அவர்களும் ஜனாதிபதியின் உரையை உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தனர்.
ஜனாதிபதி தனது உரையின் போது அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட விடயங்களை குறிப்பிட்டு முன்னாள் அரசாங்கங்களுடன் ஒப்பிட்டு கதைக்கும் போது எதிர்கட்சியினரை பார்த்து கிண்டலடித்தும் சில கருத்துக்களை கூறினார்.
இதன்போது சஜித் பிரேமதாச, கயந்த கருணாதிலக்க, நாமல் ராஜபக்ஷ, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் முகங்களை பார்த்துக்கொண்டு சிரித்துக்கொண்டதுடன் ஜனாதிபதியை பார்த்து சிரித்தனர்.
குறிப்பாக டிஜிட்டல் அடையாள அட்டைக்கு தனிப்பட்ட தரவுகள் சேகரிக்கும் விடயத்தில் தன்னை அனைவரும் ‘ஹிடலர்’ போன்று செயற்படுவதாக தெரிவிப்பதாகவும், ஹிட்லருக்கு எதிராக அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்துபோல் நாங்களும் இணைய வேண்டுமென எதிர்க்கட்சிகள் தெரிவித்திருப்பதாக ஜனாதிபதி தெரிவித்துவிட்டு, உங்களில் யார் அமெரிக்கா? யார் ரஷ்யாவென எதிர்கட்சியினரை பார்த்து கேட்டபோது, எதிர்க்கட்சிக்குள் சற்று சலசலப்பு ஏற்பட்டது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு10 மில்லியன் ரூபா ஒதுக்குவதாக தெரிவித்தபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதியை பார்த்து கிண்டலாக ஏதோ தெரிவித்தனர். இதன்போது ஜனாதிபதி, கடந்த வருடம் இந்த ஒதுக்கீடு சில மாவட்டங்களில் சரியான முறையில் செயற்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அந்த தவறு இந்தமுறை இடம்பெறாதென தெரிவித்தபோது, எதிர்க்கட்சியினர் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புண்ணகைத்தனர்.
அதேபோன்று மாகாணசபை தேர்தலை நடத்தும் எல்லை நிர்ணய சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவந்த அமைச்சரே அதற்கு எதிராக வாக்களித்த வரலாறு இந்த பாராளுமன்றத்துக்கு இருக்கிற தென ஜனாதிபதி தெரிவித்தபோது எதிர்க்கட்சியினர் சபையில் கூச்சலிட்டு, அந்த சட்டமூலத்துக்கு நீங்களும் எதிராக வாக்களித்தீர்கள் என தெரிவித்தனர்.
அதற்கு ஜனாதிபதி அவ்வாறு இடம்பெறவில்லை. ஹன்சாட்டை பாருங்கள் என சிரித்துக்கொண்டே தெரிவித்தார். அதேபோன்று கடந்த காலங்களில் இடம்பெற்ற இன்னும் சில விடயங்களை நினைவு கூறியபோதும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் ஜனாதிபதியும் நகைச்சுவையாக சிரித்துக்கொண்டு பரஸ்பர கருத்துக்களை தெரிவித்துக்கொண்டிருந்தனர்.
இறுதியாக நாட்டின் பொருளாதாத்தை கட்டியெழுப்பும் வகையில் தயாரித்திருக்கும் வரவு, செலவு திட்டத்துக்கு அனைவரும் ஆதரவளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதுடன் வரவு, செலவு திட்டத்தை தயாரிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அதிகாரிகளுக்கும் நன்றி செலுத்தி மாலை 5.50மணிக்கு வரவு, செலவு திட்ட உரையை முடித்துக்கொண்டார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் பாராளுமன்றத்தை இன்று காலை 9.30 மணிவரை ஒத்துவைத்தார்.





