நம்பிக்கை இழக்கச்செய்யும் அமெரிக்காவின் செயற்பாடு - வட கொரிய அதிபர்
நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் அமெரிக்கா செயற்பட்டதாக, வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் குற்றம்...
👤 Sivasankaran26 April 2019 4:00 PM GMT

நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையில் அமெரிக்கா செயற்பட்டதாக, வடகொரிய தலைவர் கிம் ஜொங் உன் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்காவிற்கும் வடகொரியாவிற்கும் இடையே ஹனோயில் நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது, அமெரிக்கா மீதான நம்பிக்கையை இழக்கச்செய்யும் வகையில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செயல்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்-உடன் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற உச்சிமாநாட்டின் போது கிம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கொரிய தீபகற்பத்தின் சமாதானமும், பாதுகாப்பும் அமெரிக்காவின் எதிர்கால அணுகுமுறையை முற்றிலும் சார்ந்திருப்பதாகவும் கிம் குறிப்பிட்டுள்ளார்.
© 2017 - 2018 Copyright . All Rights reserved.
Designed by Hocalwire