ஐஸ் தயாரிப்புக்கான 42 கிலோ இரசாயன பதார்த்தங்கள் மீட்பு
ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் 42 ஆயிரம் கிலோ இராசயன பதார்த்தங்களில் ஐஸ் மற்றும் பெத்தபெட்டமைன் போதைப்பொருட்களின் மூலக்கூறுகள் காணப்பட்டமை இரசாயன பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மித்தெனிய பிரதேசத்தில் மீட்கப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவுக்கு சொந்தமானது எனக்கூறப்படும் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் 42 ஆயிரம் கிலோ இராசயன பதார்த்தங்களில் ஐஸ் மற்றும் பெத்தபெட்டமைன் போதைப் பொருட்களின் மூலக்கூறுகள் காணப்பட்டமை இரசாயன பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மேலதிக விசாரணைகளுக்காக மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார்.
திட்டமிட்டக்குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் கெஹெல்பத்தர பத்மே பெக்கோ சமன் கொமாண்டோ சலிந்து உள்ளிட்ட ஐவர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.
இந்நிலையில் அவர்கள் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் விசேட தடுப்பு காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கமைய கேஹெல்பத்தர பத்மே நுவரெலியா பிரதேசத்தில் உள்ள வீடொன்றை வாடகைக்கு பெற்று ஐஸ் போதைப்பொருளை தயாரிப்புக்காக பாகிஸ்தானிகர்கள் இருவரை நாட்டுக்கு அழைத்து வந்துள்ளமை ஆரம்பத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளிக்கொணரப்பட்டிருந்தது.
மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவில் விசேட தடுப்பு காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெகோ சமனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அதனை உறுதிப்படுத்த பொலிஸாரால் முடிந்தது.
இந்நிலையில் பெக்கோ சமன் மற்றும் தெம்பிளி லஹிரு ஆகியோரை விசாரணை அதிகாரிகள் மித்தெணிய பிரதேசத்துக்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். எனினும் இதன்போது எந்தவித தகவல்களும் வெளிப்படுத்தப்பட்டிருக்கவில்லை.
இந்த பின்னணியில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது கெஹெல்பத்தர பத்மேவுக்கு பாகிஸ்தானியர் ஒருவரின் உதவியுடன் இரு கொள்கலன்கள் மூலம் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் ஒருவகை இரசாயன பதார்த்தம் கொண்டு வரப்பட்டுள்ளமை வெளிக்கொணரபப்ட்டுள்ளது.
மேல் மாகாண வடக்கு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஓலுகல மற்றும் அதன் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லிட்டன் சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் நேற்றுமுன்தினம் மித்தெனிய தலஹா பிரதேசத்தில் உள்ள இடமொன்றை சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.
இதன்போது அப்பகுதியில் இரு கொள்கலன்களில் புதைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் இரசாயன பதார்த்தம் மீட்கப்பட்டது.
குறித்த இரசாயன பதார்த்தங்களை பெக்கோ சமன் தனது நண்பர்களான பொதுஜன பெரமுனவின் அங்குணகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மற்றும் அக்கட்சியின் சார்பில் கடந்த முறை போட்டியிட்ட உறுப்பினருக்கு சொந்தமான இடத்தில் மறைத்து வைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் குறித்த இருவரும் சகோதரர்களாவர்.சந்தேக நபர்கள் இருவரும் குறித்த இரசாயன பதார்த்ததை பிறிதொரு இடத்தில் இருந்து அப்பகுதிக்கு கொண்டு வந்து இவ்வாறு புதைத்துள்ளனர்.
எவ்வாறாயினும் குறித்த பகுதியை நேற்றுமுன்தினம் சந்தேகநபர்கள் கொங்கிரிட் இட்டு முழுமையாக மூடுவதற்கு தயார் நிலையில் இருந்தாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் அங்கிருந்து ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் 42 ஆயிரம் கிலோ இராசயன பதார்த்தங்களில் ஐஸ் மற்றும் பெத்தபெட்டமைன் போதைப்பொருட்களின் மூலக்கூறுகள் காணப்பட்டமை இரசாயன பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின் அடிப்படையில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டு அவர் மேலதிக விசாரணைகளுக்காக மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் உதயகுமார வுட்லர் தெரிவித்தார்





