நாட்டில் அபிவிருத்தி கலாசாரத்திற்கு பதிலாகப் பாதாள உலக கலாசாரம்: எதிர்க்கட்சித் தலைவர்
அபிவிருத்தியால் ஒளிரும் நகரத்தை உருவாக்குவோம் என்ற கூற்றுக்கள் இன்று நிறைவேறவில்லை. அபிவிருத்தி நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவதற்குப் பதிலாகப் பாதாள உலக கலாச்சாரமே இயங்குகிறது.
நாட்டில் தற்போது அபிவிருத்தி கலாசாரத்துக்கு பதிலாக பாதாள உலக கலாசாரமே நடைமுறையிலுள்ளது. தாம் எதிர்பார்த்த புதிய இலங்கை உருவாக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மத்திய கொழும்பு தொகுதியின் கிழக்கு மாளிகாவத்தை மற்றும் கெத்தாராம பிரிவுகளில் நேற்று சனிக்கிழமை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் மேம்பாட்டிற்காக நடைபெற்ற மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய போதே சஜித் பிரேமதாச அவர்கள் இதனைக் கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
நாட்டில் தற்போது அபிவிருத்தி கலாச்சாரத்துக்கு பதிலாக பாதாள உலக கலாசாரமே நடைமுறையிலுள்ளது. எதிர்பார்த்த புதிய இலங்கை உருவாக்கப்பட்டுவிட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாநகரசபை அதிகாரம், பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி அதிகாரம் போன்றவற்றைத் தன்வசம் வைத்திருக்கும் தற்போதைய அரசாங்கம் கூறிய விடயங்கள், வழங்கப்படும் எனக் கூறிய சலுகைகள், வாக்குறுதிகள் மற்றும் சேவைகள் எதனையும் நிறைவேற்றவில்லை.
அபிவிருத்தியால் ஒளிரும் நகரத்தை உருவாக்குவோம் என்ற கூற்றுக்கள் இன்று நிறைவேறவில்லை. அபிவிருத்தி நாட்டில் நடைமுறைப்படுத்தப்படுவதற்குப் பதிலாகப் பாதாள உலக கலாச்சாரமே இயங்குகிறது.
மக்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, மீண்டும் வீட்டிற்குத் திரும்புவார்களா என்ற நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடக்குமா அல்லது கொலை நடக்குமா என்ற அச்சம் நிலவுகிறது.
நாட்டு மக்களுக்குச் சமூகப் பாதுகாப்பு கூட இன்று இல்லை. தேசிய பாதுகாப்பும் இழக்கப்பட்டு, இந்த அரசாங்கத்தின் இயலாமையால் சட்டம் ஒழுங்கு குண்டர் கும்பல் மற்றும் பாதாள உலகக் குழுக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் நாடு ஒவ்வொரு நிமிடமும் அச்சத்திலும் சந்தேகத்திலுமே இயங்குகிறது.
பிரஜாவுரிமை (ஜனநாயகம்) புதைகுழியில் தள்ளப்பட்டுத் தனிப்பட்ட கட்சியின் ஆட்சியை நோக்கி நாடு செல்கிறது. உள்ளுர் சபை தலைவர்கள் கொல்லப்படுதல், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்படுதல் போன்ற ஜனநாயகத்தை அழிக்கும் சூழ்நிலையில், பாதாள உலகம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும் நிலைக்கு நாடு சென்றுள்ளது.
சட்டம் சீர்குலைந்து காட்டுச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. நாட்டின் நீதி மற்றும் நியாயம் கிடைக்காத சூழலில் அனைத்து சமூக அமைப்புகளும் அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. பொய்யான கதைகள் பேசாமல், அரசாங்கம் தனது கடமையை நிறைவேற்ற வேண்டும். மக்கள் பிரதிநிதிகளுக்கு உடனடியாகப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
இந்த அரசாங்கத்தினால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியவில்லை. போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவோம் என்று கூறும் அரசாங்கம், அந்த வாக்குறுதியைச் செயல்படுத்தி துப்பாக்கிச் சூடு, கொலைகள் மற்றும் குண்டர் தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என்றார்.





